புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, ல.ஜ.க கூட்டணி தொகுதிப்பங்கீடு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, ல.ஜ.க கூட்டணி தொகுதிப்பங்கீடு
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு,
பாஜக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு,
அதிமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு,
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகள் எல்.ஜே.கேவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
முதலமைச்சர் ரங்கசாமி 2 தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் கடந்த தேர்தலில் என்ஆர்காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதை போல் இம்முறையும் 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் பாஜகவுக்கு கடந்த முறை 9 தொகுதிகளை விட கூடுதலாக ஒரு தொகுதி சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர்.
அதிமுகவுக்கு கடந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குகின்றனர். அதேபோல் புதிய கட்சியான லாட்டரி அதிபரின் லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
