Breaking News

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நெதன்யாகு நிலை என்ன?

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேலின் முக்கிய இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேல் விமானப்படைத் தளபதியின் இருப்பிடம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. 

இந்தத் தாக்குதல்கள் 'கெய்பர் ஷேகான்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் மிகவும் துல்லியமாக நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் பிரதமர் நெதன்யாகு தனது அலுவலகத்தில் இருந்தாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நெதன்யாகுவின் தற்போதைய நிலை என்ன, அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback