Breaking News

நோன்பு கடைப்பிடித்து இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் - யாருடனும் கூட்டணி இல்லை , மக்களுடன் மட்டுமே கூட்டணி என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாம எந்த டீமும் இல்லை, மக்களின் டீம்" ஒருவார கால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..! த.வெ.க. தலைமையில் தான் ஆட்சி..!! நோன்பு திறப்பு விழாவில் இன்னும் ஒருமுறை உறுதி செய்த தலைவர் விஜய்



செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் த.வெ.க. சார்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பெற்றது. இதில்  டி.வி.கே. கட்சியை சேர்ந்த இசுலாமியர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 

ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அட்டை வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் உள்ளே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பேசிய விஜய், நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்தே நம்மை ‘இந்த டீம், அந்த டீம்’ என்று வதந்திகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நாம் எந்த டீமும் கிடையாது; மக்களுடைய டீம் என்று தெரிந்த பின்னர் நம் மீது வேறு என்ன அவதூறு பரப்பலாம் என்று பார்த்தார்கள். அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால் கடைசியாக ‘இந்தக் கூட்டணியில் சேரப் போகிறார்; அந்தக் கூட்டணியில் சேரப் போகிறார்’ என்ற பொய்யான பிரச்சாரத்தை செய்தார்கள். இந்த செய்தியெல்லாம் கேட்டு நீங்கள் குழம்பியிருப்பீர்கள். நாம் எப்போதும் மதச்சார்பற்ற சமூகநீதி என்ற நிலைப்பாட்டில் சமரசம் வைத்துக்கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்று உறுதியாக இருக்கிறோம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை அடைவோம்” என்றார்.

விக்கிரவாண்டி மாநாட்டில் சொன்னதைப் போல மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை எதற்காகவும் யாருக்காகவும் அரசியலில் நாம் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை; யார் என்ன சொன்னாலும் நம்பாதீர் ” என்றார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback