Breaking News

அரசியலில் பரபரப்பு ராமதாஸ் உடன் சசிகலா சந்திப்பு

அட்மின் மீடியா
0

அரசியலில் பரபரப்பு ராமதாஸ் உடன் சசிகலா சந்திப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முக்கியக் கட்சிகள் உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை திடீரென சந்தித்தார் சசிகலா.தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து கலந்துரையாடினார். 

சட்டமன்ற தேர்தலில் இருவரும் எந்த நிலைப்பாடும் எடுக்காத நிலையில், ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். தனது புதிய கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை. 

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் உரிய அங்கீகாரம் வழங்காத நிலையில் ராமதாஸ் கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடதக்கது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback