துபாய் Airport அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான் வீடியோ
துபாய் Airport அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
துபாய் விமான நிலையத்தில் சனிக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலையில் துபை சர்வதேச விமான நிலைய ஓடுதளம் ஒன்றில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன் விழுந்து சேதம் விளைவித்ததால் கரும்புகை எழுந்ததாக கூறப்பட்டது.
துபையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின் எதிரொலியால், துபை சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருவதாகவும் அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, பகுதியளவில் விமான நிலைய செயல்பாடு இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் விமான நிலையத்துக்கு வருகை தர வேண்டாமெனவும், அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதைக் கருத்திற்கொண்டு அவற்றின் அடிப்படையில் வருகை தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/AJEnglish/status/2030197052605616461
Tags: வெளிநாட்டு செய்திகள்
