ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு சிலிண்டர் பதுக்கினால் 7ஆண்டுகள் சிறை அமலுக்கு வந்தது ... எஸ்மா சட்டம் !
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு சிலிண்டர் பதுக்கினால் 7ஆண்டுகள் சிறை ... எஸ்மா சட்டம் அமல்!
ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எஸ்மா சட்டம்
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் (ESMA - Essential Services Maintenance Act, 1968) என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான சேவைகள் (மின்சாரம், தண்ணீர், சுகாதாரம், போக்குவரத்து போன்றவை) பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, வேலைநிறுத்தங்களைத் தடை செய்யும் சட்டமாகும்.
இந்த சட்டம் அமலில் இருக்கும்போது, பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அது சட்டவிரோதமானது, மேலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்படலாம்.
10 மார்ச் 2026 அன்று, ஈரான் - இஸ்ரேல் போர் சூழலால் ஏற்பட்ட சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த, சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது, இதன்கீழ் பதுக்கினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்யும் கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
