Breaking News

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனுதாக்கல்

அட்மின் மீடியா
0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

இன்று தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். தினமும் மாலை 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும்.

இதில் 

மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 1 - வங்கி ஆண்டுக்கணக்கு முடிவு

ஏப்ரல் 3 - புனித வெள்ளி

ஏப்ரல் 5 - ஞாயிற்றுக்கிழமை

இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், 4 நாட்கள் விடுமுறை என்பதால் அந்த நாட்களில் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் ஆணையம் கொடுத்த 8 நாள் அவகாசத்தில் வேட்பாளர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ளன

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள்

30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 

1881ஆம் அண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அரசால்  அறிவிக்கப்பட்ட

மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 1 - வங்கி ஆண்டுக்கணக்கு முடிவு

ஏப்ரல் 3 - புனித வெள்ளி

ஏப்ரல் 5 - ஞாயிற்றுக்கிழமை

ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. 

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும் 

வேட்புமனு தாக்கல் நாட்கள்:-

30 ம் தேதி திங்கட்கிழமை

2 ம் தேதி வியாழக்கிழமை

4 ம் தேதி சனிக்கிழமை

6 ம் தேதி திங்கட்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback