உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு யூனிட்க்கு ரூ.2 மானியம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, எரிவாயு அடுப்புகளுக்குப் பதிலாக மின்சார அடுப்புகளைப் (Electric Stoves) பயன்படுத்தும் ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன்களுக்கு, கூடுதல் மின் நுகர்வுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மானியம், வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் புதிய மின் சாதனங்களை வாங்க விரும்பும் சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
மின்சார சமையல் உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 3.05 லட்சம் வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீத மானியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்தாலும், அது வழக்கமான மின் பயன்பாட்டுக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்க்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் பயமின்றி மின் அடுப்புகளைப் பயன்படுத்த இது வழிவகுக்கும்.எரிவாயுவைப் பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மின் அடுப்புகள் மற்றும் மின் சூடேற்றிகள் போன்ற உபகரணங்களை வாங்குவதற்குப் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது:
UYEGP திட்டம்: 25% மானியம் (அதிகபட்சம் ₹3.75 லட்சம்). மகளிர் தொழில் முனைவோர் திட்டம்: 25% மானியத்துடன் ₹10 லட்சம் வரை கடன். அண்ணல் அம்பேத்கர் திட்டம்: 35% மானியம் (அதிகபட்சம் ₹1 கோடி வரை).தொழிற்சாலைகள் எல்பிஜிக்கு மாற்றாக விறகு, மண்ணெண்ணெய் அல்லது பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை. இது குறித்த தகவலை மட்டும் வாரியத்திற்குத் தெரிவித்தால் போதுமானது. இந்த விலக்கு எரிவாயுத் தட்டுப்பாடு நீங்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
Tags: தமிழக செய்திகள்
