கூடுவாஞ்சேரியில் சோகம் கொசுவத்தியால் வீடு தீப்பற்றி எரிந்து ஒரே குடும்பத்தில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி
கூடுவாஞ்சேரியில் சோகம் கொசுவத்தியால் வீடு தீப்பற்றி எரிந்து ஒரே குடும்பத்தில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33), ஜெயசித்ரா (29) மற்றும் அவரது 2 வயது பெண் குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் நேற்று இரவு வழக்கம்போல் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்கி உள்ளனர்.
நள்ளிரவில் கொசுவர்த்தி சுருள் துணிகள் (அ) எளிதில் தீப்பற்றக்கூடிய ஏதோ ஒரு பொருளின் மீது விழுந்ததில் வீட்டில் தீ பரவியது.தீ வீடு முழுவதும் பரவிய நிலையில் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் பார்த்திபன், ஜெயசித்ரா மற்றும் குழந்தை ஜெயஸ்ரீ 3 பேரும் உயிரிழந்தனர்.
அதிகாலையில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீ விபத்தில் 3 பேரும் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீட்கப்பட்ட 3 உடல்களும் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொசுவர்த்திப் புகை நச்சுத்தன்மை கொண்டது எனவும், இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தூங்கும் முன் கொசுவர்த்தியை கண்டிப்பாக அணைக்க வேண்டும்.
துணிகள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் வைக்கக்கூடாது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்று கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.
Tags: தமிழக செய்திகள்
