Breaking News

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன என்ன முழு விபரம்


ரேஷன் விநியோகத்தில் அதிரடி மாற்றம்: 

கோடைக்காலத்தின் கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் (அரிசி, கோதுமை போன்றவை) ஏப்ரல் மாதத்திலேயே ஒரே தவணையாக வழங்கப்படவுள்ளன.கோடை வெயிலில் முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், இந்திய உணவுக் கழக (FCI) கிடங்குகளில் புதிய அறுவடைப் பொருட்களைச் சேமிக்க இடவசதி ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ரயில் டிக்கெட்களை ரத்து செய்யும்போது முழுத் தொகையும் திரும்பக் கிடைக்காது மாறாக, பயண நேரம் நெருங்க நெருங்க வழங்கப்படும் ரீஃபண்ட் தொகையும் குறைக்கப்படும். புதிய விதிகளின்படி, ஒரு பயணி ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால், அவருக்கு எந்தவிதமான பணமும் திரும்பக் கிடைக்காது.24 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டால், 50 சதவீத தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும். இது தவிர, பயணச்சீட்டு 72 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டால், பயணிக்கு 75 சதவீதம் வரை பணம் திரும்பக் கிடைக்கும். இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது

2026, ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் FASTag இல்லாத வாகனங்கள் ரொக்கம் செலுத்தி கடக்க முடியாது. மாறாக UPI மூலம் மட்டுமே 1.25 மடங்கு அபராதத்துடன் கட்டணம் செலுத்தி கடக்க வேண்டும் என மத்திய் அரசு அறிவிப்பு

HDFC வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே, மொபைலில் உள்ள UPI ஆப் மூலம் QR கோடை ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம். இதுவரை UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட சேவையாகக் கருதப்பட்டது. ஆனால், ஏப்ரல் 1ம் தேதி முதல் இதுவும் உங்களின் மாதப்பரிவர்த்தனை கணக்கிலேயே சேர்க்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டினால், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ₹23 + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது சில குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது. மோசடிகளைக் குறைக்கும் நோக்கில், சில கார்டுகளுக்கு ஒரு லட்சமாக இருந்த வரம்பு ₹50,000 ஆகவும், சில பிரீமியம் கார்டுகளுக்கு ₹1.5 லட்சமாக இருந்த வரம்பு ₹75,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப் (EPFO) திட்டத்தில் UPI புரட்சிதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான (EPFO) தனது 'EPFO 3.0' திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. 

இனி பிஎஃப் (PF) சந்தாதாரர்கள் தங்களின் பணத்தை (முன்பணம் அல்லது இறுதி செட்டில்மென்ட்) நேரடியாக UPI மூலம் பெற்றுக்கொள்ளலாம்.இதற்கு முன்னால் பிஎஃப் பணம் வங்கிக் கணக்கிற்கு வர சில நாட்கள் ஆகும். ஆனால், UPI முறை அமலுக்கு வரும்போது, கோரிக்கைகள் சரிபார்க்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதிய பாதுகாப்பிற்காக பிஎஃப் தொகையின் ஒரு பகுதி 'Frozen' (எடுக்க முடியாத நிலை) செய்யப்படும், மீதமுள்ள தொகையை மட்டுமே UPI மூலம் எடுக்க முடியும்.

பான் (PAN) கார்டு மற்றும் சொத்து பரிவர்த்தனை விதிகள்2026-ம் ஆண்டுக்கான புதிய வருமான வரிச் சட்டங்களின்படி பான் கார்டு தொடர்பான சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ₹10 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு கட்டாயமாக இருந்தது. ஏப்ரல் 1 முதல் இந்த வரம்பு ₹20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது ₹20 லட்சம் வரையிலான சொத்துப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயமில்லை. 

₹5 லட்சத்திற்கு மேலான உயர் ரக பைக்குகள் அல்லது கார்கள் வாங்கும் போது நிதி வெளிப்படைத்தன்மைக்காக பான் கார்டு அவசியமாகிறது.

ஏப்ரல் 1 முதல் அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கும் 'Two-Factor Authentication' கட்டாயமாக்கப்படுகிறது. இது ஆன்லைன் மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். 

சிடிஎஸ் (CTS) முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, காசோலைகள் ஒரே நாளில் (Real-time clearing) பணம் மாற்றப்படும் வசதி மேம்படுத்தப்படவுள்ளது.

நகை கடன்:-

புதிய விதிகளின்படி 2.5 லட்சம் ரூபாய் வரை தங்கம் அடமானக் கடன் பெறுபவர்கள், தங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சமாக 85% வரை தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். நடுத்தர வர்க்கத்தினரைக் கருத்தில் கொண்டு இந்தச் சலுகை வழங்கப்பட்டாலும், அதற்கு மேல் கடன் பெறுவோருக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் தேவைப்படுவோருக்குத் தங்கத்தின் மதிப்பில் 80% மட்டுமே கடனாக வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 லட்சம் ரூபாய்க்கும் மேலாகப் பெரும் தொகையைத் தங்கக் கடனாகப் பெற விரும்புவோருக்கு, தங்கத்தின் மதிப்பில் இருந்து 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் அதிகத் தொகை கடன் பெற்றுத் தொழில் தொடங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பெரும் தொகை எதிர்பார்ப்பவர்கள் தற்போது கவலையடைந்துள்ளனர்.

வங்கி ஏடி எம்

உங்கள் வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகையைப் பார்ப்பது , குறு அறிக்கை பெறுவது மற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணை மாற்றுவது போன்றவையும் இலவச வரம்பிற்குள்ளேயே சேர்க்கப்படும். ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள 5 இலவசப் பரிவர்த்தனைகளைத் தாண்டிய பிறகு, பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, மேற்கூறிய ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த மாற்றத்தால் ஏடிஎம் இயந்திரங்களை அடிக்கடி பயன்படுத்தும் சாதாரண மக்கள் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback