ஏப்ரல் 1 முதல் ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய விதிமுறை அறிவிப்பு
ஏப்ரல் 1 முதல் ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய விதிமுறை அறிவிப்பு
![]() |
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் டிக்கெட் தொடர்பான பல முக்கிய சீர்திருத்தங்களை இன்று (மார்ச் 24) அறிவித்துள்ளார்.
அதில் ரயில் டிக்கெட்களை ரத்து செய்யும்போது முழுத் தொகையும் திரும்பக் கிடைக்காது மாறாக, பயண நேரம் நெருங்க நெருங்க வழங்கப்படும் ரீஃபண்ட் தொகையும் குறைக்கப்படும்.
புதிய விதிகளின்படி, ஒரு பயணி ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால், அவருக்கு எந்தவிதமான பணமும் திரும்பக் கிடைக்காது.
24 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டால், 50 சதவீத தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும். இது தவிர, பயணச்சீட்டு 72 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டால், பயணிக்கு 75 சதவீதம் வரை பணம் திரும்பக் கிடைக்கும்.
இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
