கரூர் சம்பவம் சிபிஐ விசாரனை சம்மன் - மார்ச் 17ல் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடத்திய கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு சிபிஐ தரப்பில் இருந்து தமக்கு அழைப்பாணை வந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
