Breaking News

ஊட்டியில் செல்பி எடுக்கும் போது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்! 12 மணிநேர போராட்டத்திற்க்கு பிறகு பத்திரமாக மீட்பு

அட்மின் மீடியா
0

ஊட்டியில் செல்பி எடுக்கும் போது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்! 12 மணிநேர போராட்டத்திற்க்கு பிறகு பத்திரமாக மீட்பு

செங்கல்பட்டைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற இளைஞர் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர் கூடலூர் அருகே புகழ்பெற்ற 'ஊசிமலை' காட்சி முனைப் பகுதியில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் 150 அடி ஆழமுள்ள அடர்ந்த வனப்பகுதியுடன் கூடிய பள்ளத்தில் விழுந்தார்.



இதனைக் கண்டு அப்பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுருநாதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.பள்ளத்தின் ஆழம் மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணியில் கடும் சவால்களைச் சந்தித்தனர். ராணுவ மீட்புக் குழுவினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். நள்ளிரவிலும் நீடித்த இந்தத் தீவிர தேடுதல் வேட்டையில், சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிவகுருநாதன் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. 

நவீனக் கருவிகள் மற்றும் கயிறுகள் உதவியுடன் ராணுவத்தினர் பள்ளத்தில் இறங்கி அவரைப் பத்திரமாக மீட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்ட சிவகுருநாதனுக்குப் பள்ளத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அல்லது ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். 

அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் உயிர் தப்பியது ஒரு மிராக்கிள் என்றே மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். "சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என வனத்துறையினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback