Breaking News

121 பயணிகளுடன் அமேசான் காட்டில் விழுந்து கொலம்பியா ராணுவ விமானம் விபத்து வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அமேசான் காட்டில் விழுந்து கொலம்பியா ராணுவ விமானம் விபத்து.. 121 பேர் உயிரிழப்பு




தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற ஹெர்குலஸ் ரக விமானம் அமேசான் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 110 ராணுவ வீரர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலம்பியாவில் ராணுவத்திற்குச் சொந்தமான 'லாக்கீட் மார்டின் ஹெர்குல்ஸ் சி-130' (Lockheed Martin Hercules C-130) ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரு நாட்டின் எல்லைக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தின்போது, விமானத்தில் சுமார் 110 ராணுவ வீரர்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து நடந்ததை அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ள நிலையில், உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை

விபத்து குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். தகவல் அறிந்த மீட்புப் படையினர் அமேசான் காட்டுப் பகுதிக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

1960-ஆம் ஆண்டு முதல் கொலம்பிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள இந்த ரக விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ

https://x.com/MarioNawfal/status/2036130781760987222

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback