பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ₹10 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ₹10 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-ஆக இருந்த கலால் வரி, இப்போது ரூ.3-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.10-ஆக இருந்த கலால் வரி, தற்போது பூஜ்ஜியமாக (Zero) குறைக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
