108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸப்பிலும் பெறலாம் - முழு விபரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்.
அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தாா்.
வாட்ஸப் வசதிதை பெற 94450 30725
என்ற இந்த எண்ணுக்கு ‘ஹாய்’ என செய்தி அனுப்பினால் ‘புக் ஆம்புலன்ஸ்’ இணைப்பு கிடைக்கும்.
அதன் மூலம் நிகழ்நேர இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு பகிர முடியும்.
ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண், ஓட்டுநா் கைப்பேசி எண் ஆகியவை குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பப்படும். மேலும், ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது என்பதையும், அதன் வழித்தடத்தையும், வந்து சேரக்கூடிய கால அளவையும் கைப்பேசியிலேயே அறிந்து கொள்ள முடியும்.
இதன்மூலம், ஆம்புன்ஸ் சேவைகளை முன்பைக் காட்டிலும் விரைவாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்