மார்ச் 1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்
இன்று மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா?
சிலிண்டர் விலை
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.அந்த வகையில், மார்ச் 1-ம்தேதி சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் இடையே எழுந்துள்ளது.
CNG, PNG விலைகளில் மாற்றம்
எல்பிஜி விலைகளைத் தவிர, விமானப் பயணக் கட்டணத்தை நிர்ணயிக்கும் ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) மற்றும் CNG, PNG ஆகியவற்றின் விலைகளும் உயரலாம் அல்லது குறையலாம். இந்த விலைகளும் பெரும்பாலும் மாதத்தின் முதல் நாள் அதிகரிக்கப்படுகின்றது.
வாட்ஸ்அப்பில் புதிய கட்டுப்பாடு
நாடு முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு வருகிறது. அதன்படி, இணையத்தில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்தும் போது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும். அதன்பின், மீண்டும் பயன்படுத்த QR code மூலம் லாக் இன் செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி, இந்தத் திட்டம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
புதிய வாடகை விதி
மார்ச் 1 முதல் புதிய ஒப்பந்தங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படகின்றன. வாடகை ஒப்பந்தங்களின் டிஜிட்டல் பதிவு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வைப்புத்தொகை அதிகபட்சம் இரண்டு மாத வாடகைக்கு மட்டுமே இருக்கும். மேலும், வீட்டு உரிமையாளர்கள் 24 மணிநேரத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது.
சிம் கார்டு
சிம் பைண்டிங் விதி மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உங்கள் தொலைபேசியிலிருந்து சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ் ஆப் போன்ற செய்தி செயலிகள் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள சிம் இல்லாமல் செயலிகளை பயன்படுத்துவது இனி சாத்தியமில்லை.
ரயில் ஒன் செயலி
இந்திய ரெயில்வேயின் டிஜிட்டல் சேவையான UTS மொபைல் ஆப் மார்ச் 1-ம்தேதி(நாளை) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பயணிகள் RailOne செயலியை பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுமாறு இந்திய ரெயில்வே அறிவுறுத்துகிறது.
வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை
ஒரு நாளில் அல்லாமல், சராசரி மாதாந்திர இருப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படும். உங்கள் கணக்கு ஒரு நாளில் குறைவாக இயங்கினால், மீதமுள்ள மாதத்திற்கு போதுமான இருப்புத் தொகையை பராமரிப்பதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்கலாம்.
வங்கி விடுமுறை நாட்கள்
மார்ச் மாதத்தில் ஹோலி, ஈத், குடி பத்வா, ராம நவமி போன்ற பண்டிகைகள் காரணமாக, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்படலாம்.
எனவே, உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி வேலைகள் நிலுவையில் இருந்தால், விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
Tags: தமிழக செய்திகள்
