பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் , எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம்
அட்மின் மீடியா
0
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் , எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம்
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு (தாள்-I மற்றும் தாள் - II) நடத்துவதற்கான அறிவிப்பு http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 13ஆம் தேதியான இன்று வெளியிடப்படுகிறது
1.9.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக (Online Application) 18.2.2026 முதல் 10.4.2026 வரை விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைத்து சலுகை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியிலுள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதில் தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகுதித்தேர்வால் தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனினும், இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட சமயத்தில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து கல்வி மற்றும் செய்முறைகளை பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் யார் ? விண்ணப்பிக்கலாம்? இந்த தேர்வு யாருக்கானது?
இதுவரை TET தேர்ச்சி பெறாமல், 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியேற்று அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணியாற்றுவோர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?
D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் SGT, Primary HM உள்ளிட்டோர் TNTET தாள் 1-ற்கு விண்ணப்பிக்கலாம்.
U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் BT, BRTE, Special Edu. Teachers, MHM, (& HS.HM) உள்ளிட்டோர் TNTET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed., தகுதியுடன் இருப்பின் TET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.
இரு தாள்களையும் எழுதுவோர் தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:-
http://www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?
1. Mobile No.
2. E-mail ID
3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)
4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)
5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)
6. Community Certificate (Pdf : 250-300 KB)
7. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)
8. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)
9. D.T.Ed., Diploma Certificate (Pdf : 250-300 KB)
தாள் - 2 எனில்,
9. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
10. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
11.மாற்றுத்திறனாளி எனில், Differently Abled Certificate (Pdf : 250-300 KB)
(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
18.04.2026
இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு: பிப்.18 முதல் விண்ணப்பிக்கலாம்..!By ttn desk Feb 14, 2026, 14:37 IST2:37:44 PM1https://cdn.adgebra.net/images/webp/2007_10147_300758/AdGebra_Travel_Banner_1200x720_1_300x250.webpWith SBI Life Retire Smart Plus Policy, Build Long Term Savings for your Future.Sponsored by SBI Lifeதமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் ஒன்றை ஜூலை 4ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் 2 ஜூலை 5ஆம் தேதியும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.recommended byHearஇந்த காது கருவிகளின் விலை மற்றும் அளவு உங்களை ஆச்சரியப்படுத்தலாம்இதைப் படிக்காமல் செவிமுடிவுச் சாதனம் வாங்காதீர்கள்மேலும் அறிந்துகொள்ள
Tags: தமிழக செய்திகள்
