Breaking News

SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! ரூ.25,000-க்கு மேல் IMPS பணப்பரிமாற்றம் செய்தால் சேவை கட்டணம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரூ.25,000-க்கு மேல் IMPS பணப்பரிமாற்ற சேவைக்கு இன்று முதல் புதிய சேவை கட்டணம்

.


ரூ.25,000-க்கு மேல் IMPS-ல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டண வசூல் முறையை இன்று (பிப்., 15) முதல் SBI அமல்படுத்துகிறது. 

ரூ.25,000 முதல் 1 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைக்கு ரூ.2 சேவைக் கட்டணம் மற்றும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை, இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி கட்டணம் வசூலிக்கப்படும். 

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் விதிகள் 

ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் வழியாக ரூ.25,000 மேல் பணத்தை அனுப்பினால் கூடுதல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

ஆகவே, ரூ.25,000 மேல் ரூ.1,00,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். 

இதே தொகையை கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 

ரூ.1,00,000 மேல் ரூ.2,00,000 வரையிலும் கட்டணம் இருக்கிறது.

ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கிறது. 

அதேபோல கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி கட்டணம் இருக்கிறது. 

ரூ.2,00,000 மேல் ரூ.5,00,000 வரையில் ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 

ரூ.25,000 தொகைக்கும் கீழான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback