Breaking News

Puducherry final voter list 2026

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!! Voters list of Puducherry

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. 



வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்தனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது

புதுவையில் மட்டும் 7.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, சுமார் 10 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 22,452 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,88,696ஆக உள்ளது

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா சரி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://ceopuducherry.py.gov.in/electrol_rolls2026.php

மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்

அதில் உங்கள் தொகுதியை செலக்ட் செய்யவும்

அடுத்து உங்கள் பகுதியை செலக்ட் செய்யவும்

அதன் பின்பு அதில் உள்ள கேப்ச்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அடுத்து உங்கள் பகுதி  வரைவு வாக்காளர் பட்டியல் டவுன்லோடு ஆகும் 

அதில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள்

Give Us Your Feedback