Breaking News

neet ug 2026 registration நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் வரும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் மார்ச் 8-ஆம் தேதி இரவு 9 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தேர்வு மே மாதம் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD), இது இப்போது கல்வி அமைச்சகம் (MoE), இந்திய அரசு (GOI) என அறியப்படும் தேசிய சோதனை முகமை (NTA) ஒரு சுயாதீனமான, தன்னாட்சி மற்றும் தன்னிறைவு பெற்ற முதன்மையான சோதனை அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. 

முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்காக திறமையான, வெளிப்படையான மற்றும் சர்வதேச தரநிலை சோதனைகளை நடத்துவதற்கு.தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் (NTA)  நடத்தப்படுகின்றது

இந்திய மருத்துவ முறையின் BAMS, BUMS மற்றும் BSMS படிப்புகளில் ஒவ்வொரு துறையிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கை, தேசிய ஆணையத்தின்படி BHMS படிப்பில் சேருவதற்கும் NEET (UG) பொருந்தும். 

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை, தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. 

தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு இன்று முதல் மார்ச் 8 ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

நீட் நுழைவுத்தேர்வு மே 3-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-

இமெயில் முகவரி

செல்போன் எண்

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

ஆதார் கார்டு

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவின் ரூ.1,700 கட்டணமாக செலுத்த வேண்டும். 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1,600 மற்றும் எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.1000 செலுத்த வேண்டும்

நீட் தேர்வுக்கு  விண்ணப்பிப்பது எப்படி?
 
மேற்கண்ட லின்ங்கில் சென்றால் அதில் New Registration என்பதை தேர்வு செய்யவும். 
 
அடுத்து அதில் உங்கள் பெயர், முகவரி  உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்தவுடன், கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து சப்மிட்  என்பதை கிளிக் செய்யவும். 
 
அடுத்து  Application Number தோன்றும். இவற்றை சேமித்து, Login ஆப்ஷனை கிளிக் செய்யவும். 
 
கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவ எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நீட் 2026 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். 
 
விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்தவுடன், விவரங்களை சரிபார்க்கவும். 
 
அடுத்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
 
அடுத்து தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.03.2025

நீட் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://neet.nta.nic.in/

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback