Breaking News

கல்வி வழிகாட்டும் அறிஞர்களை உருவாக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் Melapalayam Officers Academy | Wisdom Kalvi & Employment Centre

அட்மின் மீடியா
0
கல்வி வழிகாட்டும் அறிஞர்களை உருவாக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் Melapalayam Officers Academy | Wisdom Kalvi & Employment Centre
விஸ்டம் கல்வி & வேலைவாய்ப்பு மையம் (Wisdom Kalvi & Employment Centre) மற்றும் மேலபாளையம் ஆஃபிஸ்ஸர்ஸ் அகாடமி (MOA – Melapalayam Officers Academy) இணைந்து திருநெல்வேலி மாவட்டம் மேலபாளையத்தில், கல்வி வழிகாட்டும் அறிஞர்கள் (Education Counselling & Career Guidance Trainers) உருவாக்கும் நோக்கில் ஒருநாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் தமிழகமெங்கும் உயர்கல்வி பயில மாணவர்களுக்கு சரியான கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும் ஆலோசகர்கள் மற்றும் வழிகாட்டும் பயிற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தை வலுப்படுத்தும் இலக்குடன் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்திருந்தாலும், எதைப் படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், எந்தத் துறைகளில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதில் தெளிவின்மை காணப்படுகிறது. 
இவ்வாறான குழப்பங்களை நீக்கி, சமூகத்தை வலுப்படுத்தும் வகையில் சரியான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலை வழங்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமில் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

காலை 9 மணிக்கு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பங்கேற்பாளர்களின் அறிமுகம் மற்றும் வரவேற்புரை நடைபெற்றது. அதன் பின்னர், தொழில் வழிகாட்டலின் அடிப்படை கருத்துகள் மற்றும் மாணவர்களை பயனுள்ள கல்விக்குத் தூண்டும் முறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த பயிற்சியில்

பொறியியல் படிப்புகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகள்

ஆராய்ச்சி சார்ந்த துறைகள்

வாணிபம், தொழில் மற்றும் கணக்கியல் படிப்புகள்

அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அவற்றை அடைய வேண்டிய தகுதிகள்

உயர்கல்வி மற்றும் நுழைவுத் தேர்வுகள்

வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்கள் (பட்டம் தவிர)

ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் துறை

சட்டம், MBA, ஊடககவியல் சார்ந்த படிப்புகள்

10ஆம் வகுப்புக்குப் பிறகான கல்விப் பாதைகள்

தொழில் வழிகாட்டலில் செயற்கை நுண்ணறிவு (AI)

வெளிநாட்டில் கல்வி பயில உள்ள வாய்ப்புகள்

கல்வி உதவித்தொகைகள்

சிறந்த தொழில் ஆலோசகராக உருவாகும் வழிமுறைகள்

போன்று  பல்வேறு தலைப்புகளில் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது

மதிய உணவு மற்றும் தொழுகைக்குப் பிறகு மீண்டும் பயிற்சி அமர்வுகள் தொடங்கி, மாலை நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வுடன் பயிற்சி முகாம் நிறைவடைந்தது. 

இதில் பங்கேற்றவர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டதுடன், சமூகத்தில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்.

இந்த பயிற்சி முகாம், கல்வி வழியாக சமூகத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றது. எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback