எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்
எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய முக்கிய தலைவர்களுடன் பயணித்தவர் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதோடு, ஓபிஎஸ் தொண்டர்கள் மீட்பு இயக்கத்தில் முக்கிய ஆலோசகராக இருந்த நிலையில், தற்போது புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளராக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன்
எங்களின் இந்த புதிய அரசியல் இயக்கம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.எதிர்காலத்தில் கட்சியில் இருக்கும் யாரேனும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க விரும்பினால் இதே கொள்கையோடு ஒத்துப் போகும் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். ஆனால் இது மக்களுக்கான இயக்கம் எனவும் அவர் பேசியிருக்கிறார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
