Breaking News

பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பாலியல் தொல்லை தான் நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0
பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பாலியல் தொல்லை தான் நீதிமன்றம் தீர்ப்பு


பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் திகதி காலை 10:30 அளவில், ஒரு பெண் தனது வீட்டின் வெளியே கூட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது 62 வயதுடைய முதியவர் ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்து கண் அடித்தும், 'Flying Kiss' கொடுத்தும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில்  சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் பிரிவு 509 (பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் குறித்த முதியவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

"கண் அடித்தல் மற்றும் Flying Kiss கொடுப்பது போன்றவை ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாகும். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலாகவே கருதப்படும்" என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

குற்றவாளியின் வயதைக் கருத்தில் கொண்டு, ஆறு மாத காலத்திற்கு நன்னடத்தை கண்காணிப்பின் கீழ் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், 20,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback