இந்தியா , சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் மீது வரி விதிக்கும் அதிகாரம் டிரம்ப்க்கு இல்லை , அனைத்து வரிகளும் ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு
அண்டை நாடுகள் மீது வரி விதிக்கும் அதிகாரம் டிரம்ப்க்கு இல்லை , அனைத்து வரிகளும் ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு
உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா்.
இதனை எதிர்த்து அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா், உள்பட பலா் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அந்த அமா்வில் 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’என்று தீா்ப்பளித்தனா்.
அதேவேளையில், அமா்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள், ‘தற்போதைய வரி விதிப்புகள் அறிவாா்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது அறிவாா்ந்த கொள்கையாக இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான்’என்று தெரிவித்தனா்.
இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இது "உடனடியாக" அமலுக்கு வருவதாகவும், தனது வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த 6 நீதிபதிகளின் தீர்ப்பு அவமானத்துக்குரியது. இதனால் முற்றிலும் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
