Breaking News

ஈரானில் போர் பதற்றம் - ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா முழு விவரம்

அட்மின் மீடியா
0
ஈரானில் போர் பதற்றம் - ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா முழு விவரம் 




ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகும் நிலையில் உள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை அமெரிக்காவின் போர்கப்பல்கள் சூழ்ந்துள்ளன. 

போருக்கான காரணம்-

ரான் அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே தான் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்

ட்ரோனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரானில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை ஈரானின் ட்ரோன் உளவு பார்த்தது. இதனை கவனித்த அமெரிக்க வீரர்கள் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து உடனடியாக எஃப் 35சி ரக போர் விமானத்தை அனுப்பி அதனை சுட்டு வீழ்த்தினர். இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.


துருக்கி அதிபர் ரசெப் தயிப் எர்டோகன் இன்று சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். சவுதி அரேபியாவைத் தொடர்ந்து அவர் எகிப்திற்குச் செல்லவுள்ளார். காசாவின் தற்போதைய நிலவரம் மற்றும் ஈரான் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆய்வு செய்யவுள்ளனர்

பேச்சுவார்த்தை:-

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை துருக்கியிலிருந்து (Turkey) ஓமானுக்கு (Oman) மாற்ற வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது
இந்தப் பேச்சுவார்த்தையின் போது மற்ற நாடுகள் யாரும் உடன் இருக்கக்கூடாது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவிற்க்கு எச்சரிக்கை விடுத்த சவூதி மற்றும் அமீரகம்

ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் அதன் வான்வெளி, நிலம் அல்லது கடல்வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம ஜனவரி 26, திங்கள் அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமீரகம் எந்தவொரு தாக்குதலுக்கும் ஆதரவை வழங்காது என்று தெரிவித்துள்ளது. 

மேலும், சர்ச்சைகள் இராணுவ ரீதியாக அதிகரிப்பதற்குப் பதிலாக உரையாடல், மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையை மதிப்பது போன்றவற்றின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அமீரகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்டை நாடான சவுதி அரேபியாவும் கடந்த வாரம் இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது, ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலிலும் அதன் பிரதேசம் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவித்தது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது ஈரான் தொடர்ந்து ஒடுக்குமுறையை மேற்கொண்டால், ஒரு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback