இன்றைய தலைப்பு செய்திகள்
இன்றைய தலைப்பு செய்திகள்
சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தது உறுதியானது. பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
பெண் எம்.பி.க்கள் மீதான சபாநாயகரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். சபாநாயகரின் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி காட்டம்.
ஸ்பெயினில் 78 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் பாதிப்பு. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவிப்பு.
மகளிர் பிரீமியர் லீக் டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி. டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.
த.வெ.க (TVK) தேர்தல் களம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
விஜய் எங்களை விமர்சித்தால் எங்களால் பதிலடி கொடுக்க முடியும்" என்று அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையம் வருகை: தமிழக சட்டசபை தேர்தல் தேதிகள் இந்த மாத மத்தியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வந்துள்ளார்.
சென்னை மெட்ரோ அப்டேட்: ஆலந்தூர் மற்றும் நங்கநல்லூர் பகுதிகளில் மெட்ரோ பயணிகளுக்காகப் புதிய வாகன நிறுத்த வசதிகளை CMRL நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது
மகளிர் உரிமைத் தொகை: தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது.
பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை: சென்னையில் காகங்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வனவிலங்கு மண்டலங்களில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
WPL 2026 சாம்பியன்: மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, ஆர்சிபி (RCB) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது
இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பும் வரி குறைக்கப்பட்டுள்ளது, இது ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயனளிக்கும்.
2026 சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், மற்றும் முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்வு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தேமுதிக விருப்ப மனு: தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விஜய் வருமான வரி வழக்கு: 'புலி' பட வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த 33 வயது இளைஞருக்கு அபுதாபி லாட்டரியில் 49 கோடி ரூபாய்க்கு பரிசுத்தொகை விழுந்துள்ளது . இந்திய மதிப்பில் 12,313 ரூபாய்க்கு ஷாந்தணு என்ற இளைஞர் லாட்டரி எடுத்த நிலையில் அவருக்கு ரூ.49 கோடி பரிசு கிடைத்துள்ளது
மின் தடை அறிவிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை, ஈரோடு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சோகம்: அமைச்சர் உதயநிதியை வரவேற்கக் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்கள் நேர மாற்றம்: பராமரிப்பு பணிகள் காரணமாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ராமேஸ்வரம் செல்லும் முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊபர் மற்றும் ஓலா போன்றவற்றிற்கு மாற்றாக 'பாரத் டாக்ஸி' என்ற புதிய செயலியை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார் தனியார் நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் இருந்து 30 முதல் 40% வரை கமிஷன் வசூலிக்கும் நிலையில், இந்தச் செயலி ஜீரோ கமிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது; முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத்தில் இந்தச் சேவைகள் தொடக்கம்
சிறப்பு வாக்காளர் திருத்தம்" (SIR) முறையினால் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் கவலை தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுக போராட்டம்: திமுக அரசின் புதிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை எதிர்த்து வரும் பிப்ரவரி 13-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.*
தமிழக பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான குழு, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய இன்று முதல் மாவட்ட வாரியாகப் பயணம் மேற்கொள்கிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், வரும் தேர்தலில் த.வெ.க (விஜய் கட்சி) சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 24-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, 468 மாணவர்களுக்குப் பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
காவல்துறையில் நிலவும் 'ஆர்டர்லி' (Orderly) முறையை முழுமையாக ஒழிப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 'அடிடாஸ்' (Adidas) பிராண்ட் உற்பத்தி உட்பட தமிழகம் முழுவதும் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR): ராணிப்பேட்டையில் அமையுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை வரும் பிப்ரவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 26.8°C பதிவாகியுள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் (Mist) காணப்பட்டது, மழைக்கான வாய்ப்பு இன்று குறைவாகவே உள்ளது.பி
சபரிமலை தங்கம் காணாமல் போன விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் ஆர்ஏசி டிக்கெட் உறுதி செய்யப்படுவோருக்கு பாதிக்கட்டணத்தை திருப்பித்தர ரயில்வே துறைக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தல்.படுக்கை வசதிக்காக பயணி, கட்டணம் செலுத்தும் நிலையில் இருக்கை மட்டுமே அளிப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் தகவல்
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முதல்முறையாக பிரதமர் பதிலளிக்காமலேயே நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
பிரதமரை தாக்க முயற்சி என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என பிரியங்கா காந்தி மறுப்பு; சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் ஒளிந்துகொள்வதாகவும் விமர்சனம்
மக்களவையில் உரையாற்றாமல் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி; கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உடனான இந்தியாவின் ஒப்பந்தத்தை உலகமே பாராட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம்; நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை என்றும் சாடல்
125 நாள் வேலை உறுதித் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; வரும் 13ஆம் தேதி | அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி; பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்தவர்கள், தங்களது பாக்கெட்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்ததாக குற்றச்சாட்டு
2026 WPL இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது ஆர்சிபி
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு; பாதுகாப்பு கருதி அவைக்கு வரவேண்டாம் என தான்தான் பிரதமரிடம் கூறியதாகவும் விளக்கம்
2026 U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் NISHK இன்று பலப்பரீட்சை
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
