அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் இணைந்தார்
முன்னாள் சபாநாயகர் ப.தனபால். இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வன். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார்.
இவரது மாமனார் நாமக்கல் அருணாச்சலம் என்பவர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவின் அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான் இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற பெயர் வைத்தார்.
மேலும் இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
மேலும் கேத்ரின் எழில் மலை(தலித் எழில்மலையின் மகள்)
சக்கரவர்த்தி(இமானுவேல் சேகரனின் பேரன்) உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தனர்
Tags: அரசியல் செய்திகள்
