இன்றைய முக்கிய செய்திகள்
அட்மின் மீடியா
0
ராணிப்பேட்டையில் ஜாகுவார் - லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலையை பிப்.9ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழ்நாடு முதல்வருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்த, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு
முதல்வர் பதவியில் இருக்கும்போதே உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த முதல் நபர் என்ற வரலாற்று மைல்கல்லை நிகழ்த்தியிருக்கிறார் மம்தா பானர்ஜி
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு; கெம்சந்த் சிங் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்க உள்ளது.
தொடர் வன்முறையால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பைரோன் சிங் தலைமையிலான பாஜக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு கொண்டு வந்தது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தனது ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா முடிவு. புதிய அமைப்பு தொடங்குவதா அல்லது தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் களம் இறக்குவதா என ஆலோசனை
சேலத்தில் விஜய் கலந்துகொள்ளும் தவெகவின் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு. வரும் 13ம் தேதி சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் நிலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.
15 கோடி மதிப்பீட்டில் கடலூர் வெள்ளிக் கடற்கரையினை சுற்றுலா தளமாக மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
நெல்லையில் 9வது புத்தகக் கண்காட்சி வரும் 12ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை 10 நாட்கள் நடக்க இருக்கிறது
மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள வர்த்தக மையத்தில் நடக்க உள்ள புத்தகக் கண்காட்சியில் 115 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளன
U19 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 41.2 ஓவர்களில் 311 ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து முதல் ராக்கெட் 2027 மார்ச் மாதத்திற்குள் ஏவப்படும்.மேலும், சந்திரயான் 4 மற்றும் 5 ஆகிய திட்டப்பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம். இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனை
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மூன்றாவது நாளாக முடங்கியது மக்களவை. பிரதமர் இருக்கைக்கே சென்று பதாகையுடன் பெண் எம்.பி-க்கள் ஆவேசப் போராட்டம்
3எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தால் மக்களவையில் பிரதமர் மோடியின் நேற்றைய உரை ஒத்திவைப்பு. அவைக்கு வரவே பிரதமர் மோடி அஞ்சுவதாக ராகுல், பிரியங்கா விமர்சனம்.
தமிழ்நாட்டில் 515 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம். ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9-ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2028-ல் சந்திரயான்-3 திட்டம் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி. 2035-ம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் நம்பிக்கை
மகளிர் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் பெங்களூரு - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
Tags: தமிழக செய்திகள்