Breaking News

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அட்மின் மீடியா
0
இன்றைய தலைப்புச் செய்திகள்!



தமிழ்நாடு எம்.பி-க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட். சபாநாயகர் இருக்கை நோக்கி காகிதத்தை கிழித்து வீசியதாக நடவடிக்கை

சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி போராட்டம். சபாநாயகரின் செயல் அப்பட்டமான ஜனநாயக படுகொலை என எம்.பி-க்கள் கண்டனம்

மக்களவையில் பேச விடாமல் திட்டமிட்டு தடை விதிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. ஜனநாயக உரிமை நிராகரிக்கப்படுவதாக சபாநாயருக்கு கடிதம்

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது. எதிர்க்கட்சியினர் திட்டமிட்டே அவதூறு பரப்புவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை திடீர் அறிவிப்பு. ஒட்டுமொத்த பொறுப்பாளர்களையும் மாற்ற கட்சித் தலைமை முடிவு என தகவல்.

மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்து. இறக்கைகள் சேதமடைந்த நிலையில், பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்

S.I.R-க்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடுகிறார் மம்தா பானர்ஜி. மாநிலத்தின் முதலமைச்சரே வழக்கறிஞராக ஆஜராக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு.

பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் கொடுப்பதும் பாலியல் தொல்லைதான். 61 வயது முதியவரை குற்றவாளி என தீர்ப்பு அளித்தது சண்டிகர் நீதிமன்றம்.

குஜராத் அணிக்கு எதிரான WPL வெளியேற்றுதல் சுற்று போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதல்

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்; சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தவெகவினர் ஆபத்தில் உள்ளனர்; அதனால்தான் தங்களை காப்பாற்றுமாறு விசில் அடிக்கின்றனர்; கரூர் துயரம் தொடர்பான குற்றவுணர்வே இன்றி விஜய் நடனமாடுகிறார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திண்டிவனம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்
விஜய் தங்கள் எதிரி அல்ல, திமுக மட்டுமே எதிரி என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் பேட்டி; திமுகவை எதிர்க்கும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும் என்றும் கருத்து

விரைவில் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பெரிய வெற்றி என தேசிய ஜனகூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்; தரமான பொருட்களை தயாரித்து சர்வதேச சந்தையை இந்திய பொருட்கள் கைப்பற்ற வேண்டும் எனவும் கருத்து

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்; தேர்தல் பணிகள், தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்டம் என தகவல்

வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்; ஒட்டுமொத்த தேசத்தையே பிரதமர் விற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு

SIR-க்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடுகிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. முதலமைச்சரே வழக்கறிஞராக ஆஜராவதால் பெரும் எதிர்பார்ப்பு.நேற்று முன்தினம் SIR-ஆல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்திருந்தார் மம்தா.

234 தொகுதிகளுக்கும் விருப்பமனுவை விநியோகிக்கும் தமிழக வெற்றிக்கழகம்; வரும் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மனுக்களை பெறலாம் என அறிவிப்பு

நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை ராகுல் எதிர்ப்பது ஏன் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி; எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் பரபரப்பு!மும்பையில் இருந்து புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானமும், மும்பைக்கு வந்திறங்கிய இண்டிகோ விமானமும் ஒன்றோடு ஒன்று உரசியதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதம். பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

இந்தியாவின் அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறலாம் என வாட்ஸ்அப், மெட்டா நிறுனவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை..வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக்கிடம் கொடுத்து நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக, மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு காட்டம்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback