பா.ம.க தலைவர் அன்புமணி தான் - தேர்தல் ஆணையம்
தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தான் பா.ம.க-வின் தலைவர் பா.ம.க-வில் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம். தேர்தல் ஆணையம்
தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு அளித்துள்ளது.
பாமக விவகாரத்தில் முந்தைய உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்தது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள மனுவில், பாமக தலைவர் அன்புமணி என்பதற்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே தங்கள் ஆவணங்களில் மாற்ற இயலும். பாமகவில் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம்.
கடந்த விசாரணையின்போது கூறிய தகவல்களை மறு ஆய்வு செய்து புதிய மனுவை தாக்கல் செய்துள்ளோம். பாமக விஷயத்தில் கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனக் கூறியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
