த.வெ.க. தலைவர் விஜய்யின் சேலம் கூட்டத்திற்க்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி..!!
த.வெ.க. தலைவர் விஜய்யின் சேலம் கூட்டத்திற்க்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி..!!
சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதிகேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.
இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.அதில்
5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
கூட்ட நேரம் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
Entry Pass
வயதான ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
கூட்ட நெரிசலைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
விஜய் பேசும்போது, தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், இதனால் பயணிகள் நிகழ்வைப் பற்றி அறியாமல் இருக்க முடியும், ஏனெனில் வாகன ஓட்டிகள் பார்க்க நிறுத்தலாம், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
விஜய் பயணிக்கும் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட வேண்டும்.
சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13-ந்தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
