Breaking News

தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டம் என்ன உங்கள் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பலாம்!

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டம் என்ன  உங்கள் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பலாம்!


தவெக-வின் தேர்தல் அறிக்கைக்கு உங்கள் பரிந்துரைகளை வழங்க இணையதளத்தில் நெரிசல் ஏற்படுவதால், மாற்று ஏற்படாத மின்னஞ்சல் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாகக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இணையதளத்தை அறிமுகம் தவெக செய்தது. 

’வெற்றி தமிழ்நாடு’ இயக்கம் என்ற அந்த இணையதளத்தில் மக்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அக்கட்சி தலைமை கேட்டுக்கொண்டது. "நம் தேவைகளை நாமே திட்டமிடும் இந்த வெற்றி தமிழ்நாடு இயக்கத்தில் இணைவோம்.." என பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என “tvkmanifesto2026@gmail.com” என்ற மின்னஞ்சல் முகவரியை தவெக தலைமை அறிமுகம் செய்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback