Breaking News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..! முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..! முழு விவரம்


இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

திருநெல்வேலி விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்

இந்நிலையில் ஆர். நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

நல்லகண்ணுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை முதல் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் காலமானார்

இறந்த பின் தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக நல்லகண்ணு உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், இறந்த பின் தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக நல்லகண்ணு உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் அவரின் மகள், பேரனிடம் வாரிசு என்ற முறையில் ஒப்புதல் பெறப்பட்டு உடலை பதப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி அரை கம்பத்தில் பறக்கும். கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக நல்லகண்ணுவின் உடலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மாலை 5.30 மணி முதல் நாளை மாலை 3.30 மணி வரை கட்சி நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback