Breaking News

ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சியை தொடங்கும் சசிகலா- பசும்பொன்னில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள்

அட்மின் மீடியா
0

புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா..! எப்போ தெரியுமா ?

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். 

கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக வருகின்ற ஜெயலலிதா பிறந்த நாளான 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி நேற்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback