Breaking News

சேலத்தில் நடந்த தமிழக வெற்றி கழக கூட்டத்தில் விஜய் பேசியது என்ன

அட்மின் மீடியா
0

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது

தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலம். எனக்கு அது தான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கின்றனர். அனைவரும் என் உறவு என் சொந்தம்.8 கோடி மக்களுக்கு உடன் இருக்க போவது நான்தான்” என்றார்.எங்கள் ஓட்டு எங்கள் உரிமை.. எங்கள் உரிமையை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான்.. வேறு யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று தவெக நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார்.

விஜய் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டு வந்துள்ளேன். விஜய் அரசியலுக்கு வந்தது தப்பா? மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த இடம் கொடுப்பார்கள், ஆனால் நமக்கு இடம் தர மறுக்கிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் SOP என்பார்கள். ஆனால் இங்கு Stalin Sir operating procedure ஆக இருக்கிறது” என்று விமர்சித்தார்.

Self-ஏ எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு வேலைக்கே ஆகாது என்றும் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கணக்கெல்லாம் இனி நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டும் தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? என்று திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு விஜய் சவால் விடுத்தார். 

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மறந்து விட்டு, நம்மை அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள். அனுபவம் இல்லை தான், கொள்ளை அடிப்பதில் எல்லாம் அனுபவம் இல்லைதான். சுட்டுப்போட்டாலும் வராது. கொள்கையை பெயரளவில் வைத்துக் கொண்டு நேரடியாக மறைமுகமாக சரண்டர் ஆகும் அனுபவம் எல்லாம் வராது.எங்கள் ஓட்டுமட்டுமல்லாது உங்கள் குடும்பதினரையும் தவெகவுக்கு வாக்களிக்க வையுங்கள்." என்று கேட்டுக்கொண்டார்.

எந்த கட்சியையும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. மற்றவர்களை போல வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை" அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடியும் என கேட்பவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பணத்தை கொள்ளையடிப்பதை தவிர அவர்களுக்கு வேறு அனுபவம் இருக்கிறதா?" கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை" என்று தெரிவித்தார்.

அடுத்தவங்க ஆரம்பிச்ச கட்சியில அரசியல்வாதிகளா இருப்பவர்களுக்கு ஒரு சவால். என்னை மாதிரி தனியா நின்று 1% வாக்கு வாங்க தில் இருக்கிறதா? என்றவர், “2 வருஷத்தில் முதன்மை சக்தியா வளர்ந்து 30% மக்கள் ஆதரவை பெற்றுள்ளோம்

கட்சி ஆரம்பத்த அண்ணாவை, எம்.ஜி.ஆர்,. ஜெயலலிதாவை மறந்து விட்டு நமக்கு அனுபவம் இல்லை என்கின்றனர்” என்று சுட்டிக்காட்டினர்.அதிகாரத்தை வைத்து பணத்தை கொள்கை அடித்ததை தவிர வேறு என்ன அனுபவம் இருக்கிறது. 

அடுத்தவங்கோட கட்சியில் இருப்பவர்கள்,என்னை மாதிரி தனியா கட்சி ஆரமிக்க இரண்டே ஆண்டில் 30 சதவீதம் வளர்ந்து இருக்கின்ற நமக்கு அனுபவம் இல்லையா” என்றும் அவர் விமர்சித்தார்.

நல்லாட்சி வழங்க மேதாவிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர்., மக்கள் சக்தியின் துணையால், மக்கள் மேல் அக்கறை கொண்ட அதிகாரிகளின் துணையால் சூப்பரான ஒரு நல்ல ஆட்சி என்னால் கொடுக்க முடியும். செய்து காட்டுகிறேன் என்று விஜய் உறுதி கூறினார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback