Breaking News

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் முழு விவரம்

அட்மின் மீடியா
0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக தனது 9வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

உயிரி மருத்துவத் துறைக்கு 10,000 கோடி ஒதுக்கீடு

செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உள்கட்ட அமைப்பு மேம்பாடுகளை இன்னும் அதிகரிப்பதற்காக எந்திரங்கள் உற்பத்திற்கான ஆலைகள் அமைக்க பத்தாயிரம் கோடி ரூபாய் அறிவிப்பு

சுரங்கங்கள் மெட்ரோ வழித்தடங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் புதிய திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்

ஜவுளித்துறைக்கான புதிய திட்டம் அறிவிப்பு மகாத்மா காந்தி பெயரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஹேண்ட் லூம் கைத்தறி உள்ளிட்டவை இதன் மூலமாக மேம்படுத்தப்படும் இந்தியாவின் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பலன் பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கான வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
இதற்காக நான்கு மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் உருவாக்கப்படும்

மகாத்மா காந்தி  ஸ்வராஜ் திட்டம் என இதற்கு பெயர் நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.

அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்.

எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூர் ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு

நாட்டின் மற்ற சில பகுதிகளுக்கும் இந்த அதிவிரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது

▶️மும்பை டு புனே, 
▶️புனே டு ஐதராபாத், 
▶️ஐதராபாத் டு பெங்களுரு 
▶️ஐதராபாத் டு சென்னை 
▶️சென்னை டு பெங்களுரு
▶️டெல்லி டு வாரணாசி 
▶️வாரணாசி டு சிலிகுரி

இளைய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக ஒரு உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கான ஹாஸ்டல்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.

20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்படும்

கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில்   உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும்.

16 வது நிதிக்குழு பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு

1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி குழு கிராண்ட்ஸ் ஆக அறிவிப்பு

விபத்து காலங்களில் பெறப்படும் காப்பீடு தொகைகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுகின்றது


ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்

தமிழ்நாட்டின் பொதிகை மலை, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்.

2026-27 நிதியாண்டில் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு.

2026-27 நிதியாண்டின் மூலதன செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.

கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உலகத்தரத்தில் பயிற்சி.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.

சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது.

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்; வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.

2030ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும்.

மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும், 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்

இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும்.

பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், 'கன்டென்ட்’ கிரியேட்டர்களையும் உருவாக்கும்.

தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்.

இந்தியாவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்க நீர்வழி முனையம் அமைக்கப்படும்.

நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.

மும்பை - புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி

ஏப்ரல் 2026 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும். எளியவர்களும் புரிந்து கொள்ளும் விதமான சுலபமான புதிய வருமான வரி விண்ணப்பப் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும்’ - நிர்மலா சீதாராமன்

பலமொழிகளில் இயங்கும் ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்

வானிலை, சந்தை நிலவரம், பயிர் மேலாண்மை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும்

விவசாயிகள் சரியான முடிவெடுக்க உதவும் 'மெய்நிகர்' வழிகாட்டி! 

ஒரே இடத்தில் அனைத்து விவசாயத் தீர்வுகளும்! 

ஏற்கனவே உள்ள வேளாண் இணையதளங்கள் அனைத்தும் ஏஐ (AI) உடன் இணைக்கப்படும்.
ICAR-ன் நவீன விவசாய முறைகள் இனி விவசாயிகளின் கைப்பேசியில்! 

டிஜிட்டல் முறையில் விவசாயத்தை மேம்படுத்தும் புதிய புரட்சி!

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரி களுக்கான இறக்குமதி வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

புற்று நோய்க்கு தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு

ஏழு அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் போதும் அதற்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

மாநிலங்களுக்கு ₹1.4 லட்சம் கோடி மானியம்! 

2026-27 நிதியாண்டில் மாநிலங்களின் வளர்ச்சிக்காக நிதி ஆணையத்தின் கீழ் ₹1.4 லட்சம் கோடி மானியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது! 

நிதி ஆணையப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தடையற்ற நிதி கிடைப்பது உறுதியாகியுள்ளது. இது உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களை விரைவுபடுத்த உதவும்!

தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை!

₹4 லட்சம் வரை – 0 வரி

₹4-₹8 லட்சம் வரை – 5% வரி

₹8-₹12 லட்சம் வரை – 10% வரி

₹12-₹16 லட்சம் வரை – 15% வரி

₹16-₹20 லட்சம் வரை – 20% வரி

₹20-₹24 லட்சம் வரை – 25% வரி

₹24 லட்சத்துக்கும் மேல் – 30% வரி



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback