AI மூலம் உருவாக்கப்படும் வீடியோ, புகைபடம் சமூகவலைதளங்களில் வெளியிட கடும் கட்டுப்பட்டு - மத்திய அரசு!
AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வரும் நிலையில், அதன் பயன்பாடு மற்றும் வழிமுறைகள் குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு!
ஏஐ மூலம் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் உருவாக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
சமூக வலைதளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்/வீடியோக்களில் தெளிவாக அவை Al-ல் உருவாக்கப்பட்டவை என்று குறியிட வேண்டும்.
அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால், AI, டீப்ஃபேக் வீடியோக்களை 3 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்க வேண்டும்.
Al வாட்டர் மார்க்-களை நீக்கவோ மறைக்கவோ கூடாது.
சட்டவிரோத, பாலியல் சீண்டல், தவறான தகவல் தரும் AI வீடியோ, கன்டெண்டுகளை கண்டறிந்து, அதைத் தடுக்கும் Tool-களை சமூக வலைத்தள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.
AI விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் அல்லது சட்ட நடவடிக்கை 'Disclaimer' கொடுத்து எச்சரிக்க வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தால் செயற்கையாக உருவாக்கப்படும் உள்ளடக்கத்தை முறையாக வரையறுக்கும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ல் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய விதியில்
அதில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோக்களை (டீப் ஃபேக்) அரசு அல்லது நீதிமன்றங்கள் கண்டறிந்து தடை செய்ய உத்தரவிட்டால், அவற்றை 3 மணி நேரங்களில் அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட எந்த வகையான தகவலும், மக்களுக்கு புரியும் வகையில், 'இது ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது' என்று லேபிள் மூலம் குறிப்பிட வேண்டும். இந்த லேபிளை மறைக்கவோ அல்லது அகற்றவோ பயனருக்கு அனுமதிக்கக் கூடாது. இதனால், பயனர்கள் தகவல் உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசடி, போலி ஆவணங்கள், பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் துன்புறுத்தல், ஆள் மாறாட்டம், ஆயுதங்கள் அல்லது சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய ஏஐ உள்ளடக்கத்தை தானாகவே தடுக்கும் தொழில்நுட்பத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி தகவல்கள் சட்ட விரோத உள்ளக்கத்தை போலவே கருத்தப்படும் என்றும் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரப்பப்படும் பொய் செய்திகள் மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் தொழில்நுட்பம்
