Breaking News

9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் isro yuvika 2026

அட்மின் மீடியா
0

Indian Space Research Organisation is organising a special programme for School Children called "Young Scientist Programme" "YUva VIgyani KAryakram”, YUVIKA, to impart basic knowledge on Space Technology, Space Science and Space Applications to the younger students in emerging trends in space science and technology amongst the youngsters, who are the future building blocks of our nation. ISRO has chalked out this programme to "Catch them young". The programme is also expected to encourage more students to pursue in Science, Technology, Engineering and Mathematics (STEM) based research /career.



1. Announcement of Programme Feb. 20, 20262 

Registration starts Feb. 27, 20263 

Registration ends Mar. 31, 2026

4 Publication of First selection list Apr. 13, 2026

5 2nd confirmation list (due to vacancy in first list) Apr. 20, 2026

6 YUVIKA Programme May 11-22,2026

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகின்றது

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது. 

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். 

இத்திட்டத்தின் 2026-ம் ஆண்டுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வாகும் மாணவர்கள் இஸ்ரோவின் டேராடூன், திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், ஷில்லாங், மகேந்திரகிரி, ஜோத்பூர் ஆகிய 7 மையங்களில் உள்ள பல்வேறு விதமான விண்வெளி மையங்களில் 2 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டத்திற்கான பதிவு பிப்ரவரி 27 முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறவுள்ளது. 

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback