வங்கி கடன் வசூல் செய்ய இரவு 7 மணிக்கு மேல் போன் செய்யக்கூடாது -ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் முறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
1. காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது.
2. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது
3. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்
4. கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
5. மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது
இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என RBI தகவல்
Tags: தமிழக செய்திகள்
