மத்திய அரசை கண்டித்து 7 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் முழு விவரம் Bharat Bandh
அரசு ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி நாடு முழுவதும் பாரத் பந்த் முழு விவரம் Bharat Bandh
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
7 முக்கியக் கோரிக்கைகள்
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அதுவரை 20% இடைக்கால நிவாரணம் ஜனவரி 1, 2026 முதல் வழங்கப்பட வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே (OPS) அமல்படுத்த வேண்டும்
50 சதவீத அகவிலைப்படியை (DA) அடிப்படைச் சம்பளத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும்.
உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்குக் காருண்ய அடிப்படையில் பணி வழங்குவதில் உள்ள 5% உச்சவரம்பை நீக்கி, தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்.
தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகின்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே, தபால் துறை, வருமான வரித்துறை மற்றும் பல்வேறு மத்திய அரசுத் துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். ஒ
ரு நாள் அடையாள வேலைநிறுத்தம் என்றாலும், தபால் மற்றும் நிர்வாக அலுவலகப் பணிகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
மேலும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐந்து நாள் வேலை வாரம்: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை (5-day banking) என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கான சலுகைகளை மேம்படுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
மேலும் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் போராட்டக்களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.விசிகதிமுகவுடன் இணைந்து அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
