Breaking News

டிகிரி படித்திருந்தால் போதும் ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணிகளுக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி: 

1.2.2026 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

1.2.2026 தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.2.1998-க்கு முன்போ, 1.2.2006-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்க கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறன் பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 

எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறன் பிரிவினருக்கு ரூ.50, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.450. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க :-

www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பக்க கடைசி நாள்:

8.3.2026

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DAASSISTANT2025CCB4E54CEB5542D9987FE6D1EA51D143.PDF

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback