Breaking News

மாமியார், மாமனார் கொடுமை - 6 மாத கைகுழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்...

அட்மின் மீடியா
0

மாமியார், மாமனார் கொடுமை - 6 மாத கைக்குழந்தையிடன் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இளம்பெண் காவியா என்பவர் கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள வழக்கில் தற்கொலை செய்து கொண்ட காவியா தினமும் தன்னை தன்னுடைய மாமனார் மாமியார் கொடுமை படுத்தி வந்தாக குற்றம் சாட்டி தற்கொலைக்கு முன்பே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.உயிரிழந்த காவியாவின் (20) வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மாமியார் செந்தமிழ்ச்செல்வி கைது; தலைமறைவான மாமனார் பழனிக்கு வலை. கணவர் சிவபாலனிடமும் விசாரணை



நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் மனைவி காவியா (23). இவர்களுக்கு 7 மாத சமீரா என்ற பெண் குழந்தை உள்ளது .காவியாவுக்கு மாமியார் மாமனார் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடும்ப பிரச்னை தொடர்பான விபரத்தை சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) பதிவிட்ட காவியா புதன்கிழமை இரவு, வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் தனது 7 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த வாய்மேடு போலீஸாா் அங்கு சென்று காவியா மற்றும் பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback