Breaking News

திருமணம் ஆன 3 மாதத்தில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற புதுமணப்பெண்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஹனிமூனில் விபரீதம்... காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற புதுமணப்பெண்!




ராஜஸ்தானில் காதலனை கரம்பிடிப்பதற்காக, மணந்த கணவனை கொலை செய்து விபத்து நாடகம் நடத்திய பெண் உள்பட 4 பேர் கைது 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் - அஞ்சு என்ற தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, திருமணத்தில் விருப்பமில்லாத அஞ்சு தனது காதலன் சஞ்சுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சுவை கரம்பிடிக்க திட்டமிட்ட அஞ்சு தனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சஞ்சுவின் நண்பர்கள் மூவருடன் அடித்துக் கொன்று வாகனம் மோதி உயிரிழந்தது போல் நாடகமாடி உள்ளார்.

மேலும் சஞ்சுவின் நண்பர்களிடம் தனது நகை, செல்போன் உள்ளிட்டவற்றை வழங்கிவிட்டு தானும் விபத்தில் சிக்கியது போல் அஞ்சு நாடகமாடி உள்ளார். 

ஆஷிஸின் உடலில் இருந்த காயங்கள், அஞ்சுவின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலம் உள்ளிட்டவற்றால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சிசிடிவி, செல்போன் டவர் உள்ளிட்டவற்றை ஆராய்ந்துள்ளனர். 

இதில், ஆஷிஷ் தனது மனைவியால் திட்டமிட்டு கொல்லப்பட்டதை உறுதி செய்தது. போலீசார் அஞ்சுவை விசாரணை செய்த போது, அஞ்சு தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது உண்மையாக வெளிவந்தது. அஞ்சு உள்பட 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

திருமணமாகி சில நாட்களுக்குள் காதலனுக்காக கணவரை கொன்ற அஞ்சு செய்த துரோகம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback