Breaking News

தி கேரளா ஸ்டோரி 2- படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் முற்றுகை போராட்டம் - மனிதநேய ஜனநாயக கட்சி மு.தமிமுன் அன்சாரி எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

தி கேரளா ஸ்டோரி 2- படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் முற்றுகை போராட்டம் - மனிதநேய ஜனநாயக கட்சி  மு.தமிமுன் அன்சாரி எச்சரிக்கை

தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இதில், கேரளத்தைச் சோ்ந்த 32,000 ஹிந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

வெளியானபோதே பல சர்ச்சைகளைக் கிளப்பியதுடன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான திரைப்படமாக உள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், வணிக ரீதியாக வெற்றிப்படமானதுடன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இதனை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.

முதல் பாகத்தினைப் போலவே டிரைலரில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் பதிவாகியுள்ளன. இதனைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், “தி கேரள ஸ்டோரி திரைப்படம் - 2 சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் கேரளத்தில் கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுவதாக அரசு எதிராக வெறுப்பினைப் பரப்பினர். இதுவும் மதச்சார்பின்மையைக் கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதால், கேரளா ஸ்டோரி - 2 திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி 2 தமிழ்நாட்டில் திரையிட்டால் ஜனநாயக சக்திகளை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என மனிதநேய ஜனநாயக கட்சி  மு.தமிமுன் அன்சாரி எசசரிககை விடுத்துள்ளார்.

அது தொடர்பாக அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திரைப்படத்தின் மூலம் நல்லிணக்கத்தை கெடுக்க முயலும் எந்த முயற்சியையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம். தி கேரளா ஸ்டோரி 2 என்ற திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியும் கெடுக்கும் காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக தெரிய வருகிறது.

கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பெயர் திரைப்படம் என்றால், அதனை எதிர்ப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதனை மீறி திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முயன்றால், ஜனநாயக சக்திகளை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். அனைத்து சமூகத்தவரின் ஒற்றுமையும். பொது அமைதியுமே எங்களுக்கு முக்கியம். அதை கெடுக்க முயலும் எந்த முயற்சிகளையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம்!" என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback