இன்றைய 07.02.2026 முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today
இன்று 07.02.2026 சனிக்கிழமை இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today

மின்தடை அறிவிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07-02-2026) சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மருத்துவமனை திறப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.348 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் புதிய கட்டிடங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அடுத்த ஓராண்டில் 150 அரசு வேலைகள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்
.த.வெ.க. முக்கிய அறிவிப்பு: பிப்ரவரி 2026 சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனுக்களைப் பெற பனையூர் அலுவலகத்திற்கு யாரும் வரவேண்டாம் என தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஐ.ஜி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் உட்பட 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை அருகே திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு. இன்று மாலை நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும். விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி. அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே ட்ரம்ப் அறிவிப்பு.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 69 பேர் உயிரிழப்பு, 150-ற்கும் மேற்பட்டோர் படுகாயம்.
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் மசூதி ஒன்றில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு: எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களுக்கான பிணையில்லா கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்.பி.ஐ (RBI) அறிவித்துள்ளது.
சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தது உறுதியானது. பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சேலத்தில் வரும் 13-ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சிக்கல். நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் விண்ணப்பிக்க போலீசார் கெடு.
தேமுதிக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு விநியோகம். 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்கலாம் என பிரேமலதா அறிவிப்பு.
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை தகவல்.
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்துக்கு இடையே மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி. தனக்கு சவக்குழி தோண்ட காங்கிரஸ் முயற்சிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு.
எதிர்க்கட்சிகள் மீது சவக்குழி குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் முன்வைக்கும் பிரதமர் மோடி. உத்தரப் பிரதேசம், கர்நாடக தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் பேச்சு.
கேள்விகளைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுவது ஏன் என ராகுல் காந்தி கேள்வி. உண்மைகளை கண்டு அஞ்சி, பொய்களிடம் பிரதமர் தஞ்சமடைந்து விட்டதாகவும் விமர்சனம்.
மக்களவையில் பிரதமர் பதிலுரை இன்றி நிறைவேறிய குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம். காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை முற்றுகையிட சதி செய்ததாக சபாநாயகர் கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு.
பெண் எம்.பி.க்கள் மீதான சபாநாயகரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம். சபாநாயகரின் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி காட்டம்.
மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து. 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரம்.
ஸ்பெயினில் 78 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் பாதிப்பு. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவிப்பு.
பயிற்சி ஆட்டத்தின் போது பந்து தாக்கியதால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம். தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம்.
மகளிர் பிரீமியர் லீக் டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி. டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் குடிநீர் பாட்டில்களில் கண்டறியப்பட்டுள்ளது.
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எச்சரிக்கை வாசகங்களை பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு. மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் குடிநீர் பாட்டில்களில் கண்டறியப்பட்டுள்ளதை மத்திய அரசின் அறிக்கை உறுதி செய்ததை அடுத்து உத்தரவு.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்க மனிதநேய மக்கள் கட்சி முடிவு. குறைந்தது 5 தொகுதிகளாவது கேட்போம் என ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
இந்தியா மீதான 50% வரிகளை டிரம்ப் திரும்பப் பெற்றார், அதை 18% ஆகக் குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்
Tags: தமிழக செய்திகள்