Breaking News

தமிழகம் முழுவதும் குரூப் 2,2 ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் குரூப் 2,2 ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


குரூப்-2, குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி வெளியானது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு 8-ந்தேதி (இன்று) நடைபெறுகிறது. 

தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ,இந்த நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை என்று கூறப்படுகிறது. 

பதிவெண் இல்லாததால், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.அப்போது “உங்களது பதிவெண் நந்தனம் மையத்தில் இருக்கும் என்றும் அங்கு சென்று தேர்வு எழுதுமாறும், தேர்வு நடத்துபவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இனி நந்தனம் சென்றால் நேரம் ஆகும் என்றும், தங்களால் தேர்வை சரியாக எழுத முடியாது என்றும் தெரிவித்து தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் மட்டும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வாணைய தலைவர் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று 08.02.2026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும்) IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் (ம) பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாரறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும். இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும்.

எதிர்வரும் 22.02.2026 மு.ப நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II பணிகள்) பொது அறிவு தேர்வு (தாள்-II) (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.02.2026 அன்று வழங்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback