21ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
21ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் -குமான் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
விழாவின் 2-ம் நாள் நிகழ்வான மயானக்கொள்ளை விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 5-ம் நாள் திருவிழாவான நாளை(வியாழக்கிழமை) மாலை தீமிதி விழா நடக்கிறது.r
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற் றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
