தமிழக பட்ஜெட் 2026 முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன முழு விவரம்
தமிழக பட்ஜெட் 2026 முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன முழு விவரம்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 2026-27ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
"அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணிகள் ரூ.10 கோடியில் தொடங்கப்படும். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் திட்டம் நடந்து வருகிறது. சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடியில் அமைக்கப்படும்"
மகளிர் விடியல் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கிறார்கள்
காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வருகை, கற்றல் திறன் அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டத்திற்காக கடந்த 4 ஆண்டுகளில் 1884 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
முதியோர்களுக்காக 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டம் மூலம் 27.40 லட்சம் பேர் பயணடைந்துள்ளனர்
அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலமாக 10,000 மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 1,471 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பெண் ஒதுவார்களை நியமித்தது தமிழ்நாடு அரசின் சாதனையாகும். நாட்டில் பெண் தொழிலாளர்களில் 41% தமிழகத்தில் உள்ளனர்தமிழகத்தில் 19 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறை - ரூ. 48,534 கோடி ஒதுக்கீடுமாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ. 1,471 கோடி ஒதுக்கீடுஉயர் கல்வித்துறை - ரூ. 8,551 கோடிஅனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள் - ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது
ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்-
இலங்கை தமிழர்களுக்கு உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது
ரூ.197 கோடியிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது வழங்கப்பட்டது
மகளிர் உரிமைத் திட்டம் வரும் மாதங்களிலும் தடையின்றி தொடர ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 செலுத்தப்பட்டது" எதிர்கால வரும் தடைகளை நிகழ் நேரத்தில் கணித்து மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 1.31 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதி விடுவிக்கப்பட்டது
மகளிர் சுய உதவிக் குழுக்களில் 6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளனஅரசு மருத்துவமனையில் நடைபெறும் பாதுகாப்பான பிரசவங்களில் நாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது
பெண்களுக்கு நெருக்கடி நேரங்களில் உதவ காவலர் செயலிதமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தபட்டு வருகிறது
மகளிர்க்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் விடியல் பயணத்தின் மூலம் சராசரியாக 888 ரூபாய் மாதத்திற்கு பெண்கள் சேமிக்கின்றனர்.
கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே உயர்கல்வியை பொறுத்தவரையில் தேசிய சராசரியில் 47 சதவிகிதமாக உயர்கல்வி உள்ளது.
உயர்கல்வித்துறைக்கு 8505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டுகளுக்கு ரூ.101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்
11.11 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ. 4000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் 25,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானம், கப்பல் இயங்கு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கப்பல் கட்டும் தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்துறைக்கு 4882 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.41 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ. 291 கோடி ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ. 22,090 கோடி
சென்னை மாநகரின் சுற்றுக்குழாய் திட்டம் - ரூ. 3,000 கோடி
தொழிலாளர் நலத்துறை - ரூ. 1,996 கோடி
நதிக்கரை மேம்பாட்டு திட்டம் - ரூ. 374 கோடி
பள்ளிக் கல்வித் துறை - ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ. 1,471 கோடி ஒதுக்கீடு
அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி - ரூ.10 கோடி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறை - ரூ. 8,505 கோடி
சிறப்பு திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,088 கோடி
ஊரக வளர்ச்சி துறை - ரூ. 28,687 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை - ரூ. 718 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 28,827 கோடி
அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள் - ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது
பிற மாநிலங்கள், அயல்நாடுகளில் தமிழ் படிப்பதற்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன
மகளிர் சுய உதவிக் குழுக்களில் ரூ.6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோவில்களில் பெண் ஓதுவார் நியமனம் திமுக அரசின் மகத்தான சாதனையாகும்.
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பாக பிரசவம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
மகளிருக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மகளிருக்காக 19 தோழிகள் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன
6,23,529 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் திட்டத்தில் 10,637 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களாக 25 இடங்களில் அன்புச்சோலைகள் திறக்கப்பட்டுள்ளன.
தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
உள்ளாச்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் 3,632 பேர் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்பு
ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,471 கோடி ஓதுக்கீடு
இலங்கை தமிழர்களுக்காக உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தில் 3,721 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.101 கோடி அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,638 கோடி ஒதுக்கீட செய்யப்படுகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு- மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு
முதல்வர் விளையாட்டு போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் திட்டத்தில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.809 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
சென்னையில் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து சமச்சீராக குடிநீர் வியோகிக்க முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.3,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நலம் பேண முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காலை உணவுத் திட்டம் மூலம் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 4 ஆண்டுகளில் ரூ.1,284 கோடி ஒதுக்கீடு
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 6.75 லட்சம் மாணவர்களுக்கு ம டிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.
8,52,680 மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2,000 பராமரிப்பு தொகை, ரூ,1,500 உதவித்தொகை பெறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை, அறிவியல், கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிதி ரூ.48,534 கோடி ஒதுக்கீடு.
11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத் திட்டங்கள் அறிமுகம்
புதுமைப்பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு* நதிக்கரை மேம்பாட்டுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தில் 48,65,050 மாணவர்களுக்கு திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
GIG தொழிலாளர்கள் 2000 பேருக்கு தலா ரூ.20,000 மானியம்.
புதிதாக 30 முதல்வர் படைப்பகங்கள் அமைக்க ரூ.104 கோடி ஒதுக்கீடு
அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.22,090 கோடி ஒதுக்கீடு.
திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார வளர்ச்சி உடன் அரசு இயங்கி வருகிறது.
சென்னை தரமணியில் செமிகண்டக்டர் மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
செமி கண்டக்டர் இயக்கத்துக்கு 5 ஆண்டு செயல்திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு
தொழில்துறையில் ரூ.12.30 லட்சம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய முதன்மையான மையமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை
11.19% எனும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,500 கோடி மதிப்பில் பணிகள் நடந்த வருகின்றன.
விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.6,374 கோடி ஒதுக்கப்பட்டு 87,34,363 கோரிக்கைகள் தீர்ப்பு
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு.
5 ஆண்டில் 36 லட்சத்துக்கும் மேலான வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் 1,000 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டம்
5 ஆண்டுகளில் 38,62,919 அமைப்பு சாரா தொழிலார்களுக்கு ரூ.3,397 கோடி நலத்திட்ட உதவிகள்.
வனவிலங்குகளை பாதுகாப்ப 6 புதிய வனவிலங்கு சரணாலயம்
நாமக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் 9 நியோ டைடல் பூங்கா கட்டப்படுகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு, 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு.
சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.1,618 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.
5 ஆண்டில் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 118 பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவையும் அரசு அமைக்கிறது.
Tags: தமிழக செய்திகள்
