Breaking News

பெண்களுக்கு மகிழ்சியான செய்தி இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 வழங்கப்படும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

பெண்களுக்கு மகிழ்சியான செய்தி இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 வழங்கப்படும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!



சட்டப்பேரவை தேர்த்ல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருப்பதால், இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிடும் என்று கூறி, இந்த தொகை அட்வான்ஸாக தமிழக அரசு பெண்களின் வங்கிக் கணக்கில் வரவை வைத்தது. 

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்கு ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வங்கிக் கணக்கில் தமிழக அரசு நேரடியாக செலுத்தியது. இதனால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  திமுக அரசு மீதான அவரின் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்

இரவோடு இரவாக மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட உள்ளதாக கூறி, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளீர்கள். ஒவ்வொரு ஆண்டும் தான் கோடைக்காலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை தேர்தல் உஷ்ணம் அதிகம் உள்ளதால் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன. இது உங்களுக்கு (திமுக) தேர்தல் காய்ச்சால் ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது என்றார் எடப்பாடி பழனிசாமி

அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்: இது புது திட்டம்.மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை ரூ 2000 வழங்கப்படும் என்றார்

அமைச்சர் தங்கம் தென்னரசு: மக்களுக்கு நாங்கள் கொடுப்பது எல்லாம் சூழ்ச்சி என்றால் பீகார், மகாராஷ்டிராவில் பாஜக கொடுத்துள்ளதே அது சூழ்ச்சி இல்லையா? என பதில் கூறினார்

இதன் மூலம், திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், 2027ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு மே மாதம் ரூ.4,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 2,000 ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.4,000 வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback